search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக ஆர்ப்பாட்டம்"

    • பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
    • கைதான பா.ஜ.க.வினரை தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடியும். தென் மாநிலங்களில் வெற்றி பெற முடியாது. இந்தி பேசும் மாநிலங்களை கோமூத்ரா மாநிலங்கள் என குறிப்பிட்டார். இதனை கண்டித்து தமிழகத்தில் பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் எந்தவித முன்அறிவிப்பின்றி திடீரென்று தருமபுரி  பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடாது என்று பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

    கைதான பா.ஜ.க.வினரை தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் சிவனேசன் கலந்துகொண்டார்.
    • திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை:

    மேகதாது அணை விவகாரம், கனிமவள கொள்ளை, டாஸ்மாக் கடைகளை மூடுதல், சட்டம்-ஒழுங்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவை தொடர்பாகவும், திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் 120வது வட்டத் தலைவர் இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் சிவனேசன் கலந்துகொண்டார். மாவட்ட துணைத் தலைவர் சுமோ சுரேஷ், மீனவர் பிரிவு மாநில செயலாளர் பிரேம்குமார், திருவல்லிக்கேணி தெற்கு மண்டல் தலைவர் முனுசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 

    • சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    சென்னை:

    கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சிறுபான்மையினர் அணியை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்களும் புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான எம்.கே.கிளாரன்ஸ், வி.பி.துரைசாமி, செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் டால்பின் ஸ்ரீதர், நடிகை நமீதா, முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் காயத்ரி தேவி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன், தனசேகர் மற்றும் மாநில மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாய அணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது
    • தமிழக அரசு தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை

    தென்னை விவசாயி–களை காக்க பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தேங்காய் விலை வெகுவாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்ப ட்டுள்ளனர்.

    தேங்காய் வழங்க வேண்டும். அதனால் தேங்காய் விவசாயிகளை காப்பாற்றும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ஜ.க விவசாய அணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல பள்ளிகளில் சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பால் வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணை வினியோகம் செய்ய வேண்டும்.

    பல்வேறு இடர்பா டுகளால் நஷ்டத்தில் இயங்கி வரும் தேங்காய் மட்டை தொழிற்சாலைகளை காப்பாற்றதமிழக அரசு தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகளில் சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பால் வழங்க வேண்டும்.
    • நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.

    கோவை:

    தென்னை விவசாயிகளை காக்க பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தேங்காய் விலை வெகுவாக சரிந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதனால் தேங்காய் விவசாயிகளை காப்பாற்றும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 தேங்காய்கள் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ஜ.க விவசாய அணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல பள்ளிகளில் சத்துணவோடு தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பால் வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.

    பல்வேறு இடர்பாடுகளால் நஷ்டத்தில் இயங்கி வரும் தேங்காய் மட்டை தொழிற்சாலைகளை காப்பாற்ற தமிழக அரசு தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் பண்ணவயல் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ் (தெற்கு), சதீஷ்குமார் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா வரவேற்றார்.

    இதில் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார். இதனைத்தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், பிரசார பிரிவு மாவட்ட துணை தலைவர் போர்வாழ் கோவிந்தராஜ், மருத்துவர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தர்மதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யம்பெருமாள் நன்றி கூறினார்.

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் சக்திவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.

    இதே போல பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் தங்கள் கைகளில் கரும்பு ஏந்தி வந்து ஊர்வலமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    திருச்சி:

    தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணைத் தலைவர் கோவிந்தராஜன், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சந்துரு, முத்தையனன், கும்பக்குறிச்சி பழனிச்சாமி, ஏ.ஆர்.பாட்சா மல்லி செல்வம், மிலிட்டரி நடராஜன், முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், பழனிக்குமார், நாகேந்திரன், பூண்டு பாலு மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கைகளில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

    • விலைவாசி உயர்வு மட்டுமே தி.மு.க. ஆட்சியில் சாதனையாக உள்ளது.
    • கோவை விவகாரத்தில தமிழக டி.ஜி.பி.யையும் பொய் பேச வைத்துள்ளது.

     அந்தியூர்: 

    தமிழகத்தில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் அருகில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி விட்டு,பால் விற்பனை விலையை 12 ரூபாய் என உயர்த்துவதுதான் திராவிட மாடல். குஜராத்தில் செயல்படும் அமுல் கூட்டுறவு நிறுவனம், தனது வருவாயில் 82 சதவீதத்தை அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குகிறது.

    கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 32 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஒரு நாளுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. ஆனால், அமைச்சர் நாசர் நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பொய் சொல்கிறார். 


    தி.மு.க. ஆட்சியில் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கட்டுமானப் பொருட்கள் தொடங்கி, சொத்துவரி, குடிநீர், மின்சார கட்டணம், ஆவின் பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும், தமிழகத்தில் விலையை குறைக்கவில்லை. கடந்த 16 மாத கால தி.மு.க. ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது.

    கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் என பா.ஜ.க. சொன்னது. அதனை என்.ஐ.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக டி.ஜி.பி.யையும் பொய் பேச வைத்துள்ளது. எத்தனை நாளுக்குத்தான் இந்த ஏமாற்று வேலையை பார்த்துக் கொண்டு இருப்பது? வரும் மக்களவை தேர்தலின்போது, தமிழகம் இந்த மாயையில் இருந்து வெளியேறி, தேசியத்தின் பக்கம் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கடலூர் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    • சோதனை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    கடலூர்:

    தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கார் திடீரென்று வெடித்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, கார் இரண்டாக உடைந்த சம்பவம் பெரும் அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வெடிகுண்டு எடுத்துச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதனை தொடர்ந்து 5 பேரை உ.பா. சட்டத்தில் கைது செய்து என்.ஐ.ஏ விசாரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.

    இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவு பேரில் தலைமை காவலர் பாரி தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலைமை காவலர் இளங்கோவன் தலைமையில் மோப்பநாய் பீட் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடை முழுவதும் வெடிகுண்டு உள்ளதா? என்பதனை தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சந்தேகப்படும்படியான பொருட்கள் உள்ளதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இது மட்டுமின்றி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கடலூர் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சோதனை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×